‘சூடு, சொரணை இருந்தால்’.. செங்கோட்டையனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

செங்கோட்டையன் அலுவலகத்தில் புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-30 11:48 IST

மானாமதுரை,

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு த.வெ.க.வில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கோபியில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் அவர் வைத்திருந்த பழைய பெயர் பலகை அகற்றப்பட்டு புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் உருவப்படங்களுடன் செங்கோட்டையன் உருவப்படமும் இடம் பெற்றுள்ளது. அதில் தவெக கொள்கை தலைவர்கள் புகைப்படமு, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், தவெகவில் இணைந்த செங்கோட்டையனை கண்டித்து மானாமதுரையில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், “செங்கோட்டையனே அடையாளம் தந்த அதிமுகவே வேண்டாம் என்று போன பிறகு ‘எம்.ஜி.ஆர். ஜெயலலிதா’ படம் மட்டும் எதற்கு சூடு, சொரணை இருந்தால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்தாதே....” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் மானாமதுரையில் பரபரப்பு ஏற்படுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்