திருச்சியில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.;
சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சி வந்த பயணி ஒருவரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அதில் 3 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கடத்தி வந்த பயணியை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சாவின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3 கோடி ஆகும்.