தென்காசி அருகே சாலை விபத்தில் நகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் உயிரிழப்பு

தென்காசி அருகே சாலை விபத்தில் நகராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-11-30 11:11 IST

தென்காசி,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இரட்டைக்குளம் விளக்கு பகுதியில் பைக் மீது காய்கறி ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுரண்டை நகராட்சி கவுன்சிலர் உஷா பிரபு, பிளஸ்ஸி மற்றும் அருள் செல்வம் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து விரைந்து வந்த போலீசா உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கும் முன்புதான் கடையநல்லூர் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மற்றொரு விபத்தில் 3 பேர் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்