ராமநாதபுரத்தில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் காரணமாக முதுகுளத்தூர், உச்சிப்புளி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று( புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே பெருங்குளம், செம்படையார்குளம், எஸ்.கே.ஊரணி, நாகாச்சி, உச்சிப்புளி, என்மனம் கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, நொச்சியூரணி, மானாங்குடி, புதுமடம், அரியமான்பீச், சூரங்காட்டு வலசை, தாமரைகுளம், ரெட்டை ஊரணி, ஏந்தல், உடைச்சியார் வலசை, வரலாந்தரவை, குயவன்குடி, அழகன்குளம், ஆற்றாங்கரை, பனைக்குளம், தேர்போகி, புதுவலசை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை ராமநாதபுரம் பகிர்மான மின் செயற்பொறியாளர் வி.திலகவதி தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர்
இதே போல முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே முதுகுளத்தூர், மேலச்சாக்குளம், கீழச்சாக்குளம், கடம்பன்குளம், கிடாத்திருக்கை, மேலகண்ணிச்சேரி, ஆத்திக்குளம், காக்கூர், புளியங்குடி, ஆதனகுறிச்சி, மேலத்தூவல், கீழத்தூவல், விளங்குளத்தூர், வெங்கலக்குறிச்சி, கீழகண்ணிச்சேரி, பெருங்கருணை, நல்லூர், கீரனூர், ஆணைசேரி, மணலூர், ஆரபத்தி, மணிபுரம், விக்கிரபாண்டிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்