ஆக்சியம் 4 மிஷன் - ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

சுபான்ஷு சுக்லாவை நினைத்து மொத்த தேசமும் பெருமையாக உணர்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.;

Update:2025-06-25 15:31 IST

புதுடெல்லி,

நாசாவில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது பால்கன் 9 ராக்கெட். நாசாவின் ஆக்சியம் 4 மிஷன் மூலம் சர்வதேச ஆய்வு மையத்திற்கு சுபான்ஷு சுக்லா பயணம் மேற்கொள்கிறார். 36 மணி நேரம் பயணித்து நாளை (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு விண்வெளி நிலையத்தை சென்றடைகிறார். பல்வேறு காரணங்களால் மொத்தம் 6 முறை திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று புறப்பட்டனர். விண்வெளியில் பயிர்கள் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய உள்ளார் சுபான்ஷு சுக்லா.

இந்தநிலையில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் ஆக்சியம் மிஷன் 4 குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:-

குழுவின் கேப்டனாக இயங்கி ஒரு புதிய மைல்கல்லை சுபான்ஷு சுக்லா படைத்துள்ள இந்த நேரத்தில், அவரை நினைத்து மொத்த தேசமும் பெருமையாக உணர்கிறது. இந்தியா, அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி வீரர்களை இணைத்த இந்த ஆக்சியம் மிஷன் 4, இந்த உலகமே 'வசுதைவ குடும்பகம்' என்ற 'ஒரே குடும்பம்' என்பதை நிரூபிக்கிறது. இந்த பணி வெற்றி பெற வாழ்த்துகள் என கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்