மணிமுத்தாறு அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை
சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.;
நெல்லை,
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
தொடர்ந்து 6-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளான்ர். காலையில், மணிமுத்தாரு அருவிக்கு குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.