கொடைக்கானலில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் திகழ்கிறது.;

Update:2026-01-13 16:08 IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த இயற்கை அழகை ரசித்து ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைகின்றனர்.

இந்நிலையில், கொடைக்கானலில் இன்று படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்