பி.எஸ்.என்.எல்.: ஒரு ரூபாய்க்கு புதிய சிம் கார்டு வழங்கும் திட்டம்
இந்த சலுகை வருகிற 31-ந்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும்.;
நெல்லை,
நெல்லை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ராஜேஷ்குமார் வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 570 இடங்களில் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தைக்கொண்டு நிறுவப்பட்டுள்ள 4 ஜி கோபுரங்கள் இயக்கத்தில் உள்ளன. 4 ஜி சேவையை எளிதில் மக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியாக ஒரு ரூபாய்க்கு சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல் 4 ஜி சிம் முற்றிலும் இலவசம், திட்டக் கட்டணமும் ரூ.1 மட்டுமே. இந்த திட்டத்தின் கீழ், புதிய இணைப்பு மற்றும் பிற நெட்ஒர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல்.க்கு மாறும் எந்த ஒரு வாடிக்கையாளரும் முதல் ஒரு மாத காலத்திற்கு வரம்பற்ற குரல் அழைப்புகளை பெறலாம்.
மேலும் இந்த திட்டத்தில் இணைவோர் தினமும் 100 குறுஞ்செய்திககளையும், தினமும் 2 ஜி.பி டேட்டா முதல் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். 30 நாட்களுக்குப் பின்னர் பி.எஸ்.என்.எல்.-ல் அமலில் உள்ள தங்களுக்கு தேவைப்படும் ரீசார்ஜ் வவுச்சர்களை கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சலுகை வருகிற 31-ந்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு இ-சிம் சேவைகளை வழங்குகிறது. பொதுமக்கள் இந்த புதிய ஒரு ரூபாய் திட்டத்தையும், இ-சிம் வசதியையும் பெற்று பலன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.