8 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் - முன்னிலை நிலவரம்
ஜம்மு காஷ்மீரின் நக்ரோதா தொகுதியில் பா.ஜ.க. வெற்றியை உறுதி செய்துள்ளது.;
புதுடெல்லி,
கடந்த நவம்பர் 11-ந்தேதி ராஜஸ்தான், ஜார்க்கண்ட், தெலுங்கானா, பஞ்சாப், மிசோரம் மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 2 தொகுதிகள் என மொத்தம் 8 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை மிசோரமின் டம்பா தொகுதியில் அதிகபட்சமாக 82.3% வாக்குகள் பதிவாகின. அடுத்ததாக ராஜஸ்தானின் அன்ட்டா தொகுதியில் 80.3% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஒடிசாவின் நுவாபாடாவில் 79.4% வாக்குகள் பதிவாகின. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டா தொகுதியில் 75.1% வாக்குகள், ஜார்க்கண்ட் காட்சிலா தொகுதியில் 74.6% வாக்குகள், பஞ்சாப் தார்ன் தரன் தொகுதியில் 61%, ஜம்மு காஷ்மீர் புட்காம் தொகுதியில் 50% வாக்குகள் மற்றும் தெலுங்கானா ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் 48.5% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த 8 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதன் தற்போதைய முன்னிலை நிலவரம் பின்வருமாறு;-
- ஜம்மு காஷ்மீர் (பத்கம் தொகுதி) - ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி
- ஜம்மு காஷ்மீர் (நக்ரோதா தொகுதி) - பா.ஜ.க.
- ராஜஸ்தான் (அன்ட்டா தொகுதி - காங்கிரஸ்
- மிசோரம் (தம்பா தொகுதி) - மிசோ தேசிய முன்னணி
- ஒடிசா (நவுபாதா தொகுதி) - பா.ஜ.க.
- பஞ்சாப் (தார்ன் தரன் தொகுதி) - ஆம் ஆத்மி
- ஜார்கண்ட் (காட்சிலா தொகுதி) - ஜே.எம்.எம்
- தெலுங்கானா (ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி) - காங்கிரஸ்
இதில் தற்போதைய நிலவரப்படி ஜம்மு காஷ்மீரின் நக்ரோதா தொகுதியில் பா.ஜ.க. வெற்றியை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.