தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகள் - ஜி.கே. வாசன்

இந்தி கூட்டணி மீது தொடர்ந்து பீகார் மாநில மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை இப்போது மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.;

Update:2025-11-14 14:01 IST

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது வாழ்த்துக்குரியது. பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஜெடியு மற்றும் எல்ஜெபி உள்ளடக்கிய ஒத்த கருத்துடைய கட்சிகள் மீது அம்மாநில மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி வெளிப்படுத்தியிருக்கிறது.

Advertising
Advertising

இதற்கு முக்கிய காரணம் மத்திய மாநில அரசுகளின் இணக்கமான செயல்பாடுகள். அது இந்த வெற்றியை உறுதி செய்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே பீகார் மாநிலம் படிப்படியாக வளர்ச்சி பெற்று முன்னேறியிருக்கிறது.

பாரதப் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோரது சரியான செயல்பாட்டிற்கு பீகார் மக்கள் வாக்கின் மூலம் நம்பிக்கை அளித்திருப்பது பாராட்டுக்குரியது.

இந்தி கூட்டணி மீது தொடர்ந்து பீகார் மாநில மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை இப்போது மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்து கூறியதையும், தேர்தல் ஆணையத்தின் மீது கூறிய முறைகேடுகளையும் பீகார் மாநில வாக்காளர்கள் முறியடித்திருக்கிறார்கள். எனவே மத்திய மாநில அரசுகளுடைய ஒத்த கருத்துகள் அம்மாநில வளர்ச்சி என்பதை இந்த தேர்தலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) இயக்கத்தின் சார்பிலே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குறிப்பாக பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்