இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

படுகாயமடைந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்;

Update:2025-05-16 15:53 IST

சென்னை ,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொளத்தூர் பகுதியில் வசித்து வந்த கார்த்திக் என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் நல்லாமூரில் சாலை ஓரமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தார்.அப்போது செய்யூரில் இருந்து அதிவேகமாக வந்த கார், கார்த்திக்கின் வாகனத்தின் மீது மோதியது.இந்த விபத்தில் கார்த்திக் மற்றும் அவரது மகள் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்