தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு: 2 பேர் கைது
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றபோது, 3 பேர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.;
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாணிக்க இசக்கி (வயது 32). மீனவரான இவர் கடந்த 5ம் தேதி இரவு அப்பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அவரை வழிமறித்து, அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து மாணிக்க இசக்கி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போனை பறிப்பில் ஈடுபட்ட திரேஸ்புரத்தைச் சேர்ந்த உதயா மகன் சிவராமன்(20), சின்னக்கண்ணு மகன் மாதவன்(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.