பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவித்த தெற்கு ரெயில்வே.. தொடங்கியது முன்பதிவு

சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.;

Update:2026-01-08 08:07 IST

கோப்புப்படம்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவித்திருந்ததாவது;-

திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்புரெயில் (வண்டி எண்: 06058) வருகிற 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) திருநெல்வேலியில் இருந்து காலை 3.45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்புரெயில் (வண்டி எண்: 06057) வருகிற 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்புரெயில் (வண்டி எண்: 06154) வருகிற 14ம் தேதி (புதன்கிழமை) திருநெல்வேலியில் இருந்து காலை 3.45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்து சேரும். மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்புரெயில் (வண்டி எண்: 06153) வருகிற 14ம் தேதி (புதன்கிழமை) செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06166) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) திருநெல்வேலியில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்புரெயில் (வண்டி எண்: 06165) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து மதியம் 4.40 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

போத்தனூரில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06194) வருகிற 8ம் தேதி (வியாழக்கிழமை) போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும். மறுமார்க்கத்தில், சென்னை சென்டிரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06193) வருகிற 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) போத்தனூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.05 மணிக்கு போத்தனூர் வந்து சேரும்.

சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06151) வருகிற 12 மற்றும் 19ம் தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06152) வருகிற 13 மற்றும் 20ம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடியில் இருந்து மதியம் 5.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும்.

இந்நிலையில் இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே போத்தனூர் - சென்னை சென்டிரல் செல்லும் ரெயிலுக்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது.    

Tags:    

மேலும் செய்திகள்