சென்சார் போர்டுக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது: நயினார் நாகேந்திரன்
வழக்கு தள்ளிப்போனதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.;
சென்னை,
விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இன்று இதற்கான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கு 21-ம் தேதிக்கு தள்ளிப்போனது.பொங்கலுக்காவது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு தள்ளிப்போனதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கோவையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
சென்சார் போர்டை பாஜக பயன்படுத்துவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமலாக்கத்துறை என்பது தனி அமைப்பு, வருமான வரித்துறை என்பது தனி ஆணையம். சென்சார் போர்டுக்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஜனநாயகன் படம் குறித்து சென்சார் போர்டு உறுப்பினர்கள் சில கருத்துகளை கூறியுள்ளனர். திரைப்படங்களில் சிலவற்றை காட்டலாம், சிலவற்றை காட்டக்கூடாது என்பது உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சில கருத்துகளை கூறியுள்ளனர். அதை சரியா தவறா என்பது பாரதிய ஜனதா கட்சி சார்பில் கூற முடியாது. என தெரிவித்தார்.