சென்னை: ஓடுபாதையில் விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு
விமானி சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.;
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்ற விமானத்தின் டயர் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 166 பேருடன் மும்பைக்கு புறப்பட்ட விமானம், ஓடுபாதைக்கு சென்றபோது திடீரென விமானத்தின் பின்பக்க டயர் வெடித்தது.
அப்போது விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதியடைந்து கூச்சலிட்டனர். இதற்கிடையில் சாதுரியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை உடனடியாக ஓடுபாதை அருகே நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் மற்றும் பயணிகள் உள்பட 166 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.