கடலூாில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி தீவிரம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கடலூாில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் இருந்து முத்துகிருஷ்ணன் பிள்ளை வீதிக்கு பிரிந்து செல்லும் இடத்தில் முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் வண்டிப்பாளையம் சாலை-முத்துகிருஷ்ணன் பிள்ளை வீதி சந்திப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் சாலையிலேயே ஆறுபோல் வழிந்தோடியது. இதனால் வடிகால் வாய்க்கால் கட்டக்கோாி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் அனு ஆகியோர் திருப்பாதிரிப்புலியூரில் வண்டிப்பாளையம் சாலையில் வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்பேரில் முத்துகிருஷ்ணன் பிள்ளை வீதியில் இருந்து சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு வடிகால் வாய்க்கால் கட்டி, கழிவுநீரை சின்ன வாய்க்காலில் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வடிகால் வாய்க்கால் கட்டும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.