தூத்துக்குடி அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு

எப்போதும் வென்றான் அருகில் உள்ள தெற்கு கோடாங்கிபட்டி கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்த சந்திரவேல் விவசாயி ஆவார்.;

Update:2025-06-11 12:57 IST

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகில் உள்ள தெற்கு கோடாங்கிபட்டி கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் சந்திரவேல் (வயது 60), விவசாயி ஆவார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு வாசலில் பாய் விரித்து படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு பாம்பு அவரை கடித்துள்ளது.

இதனையடுத்து அரது மகன் ஜெயக்குமார் கார் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்