முல்லைப்பெரியாறு ஆற்றில் வெள்ளம் - கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது;
கோப்புப்படம்
தேனி,
தென்மேற்குப் பருவமழை தொடர்ச்சியாக 5 நாட்களுக்கும் மேலாக பெய்து வருவதால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.