தரணி போற்றும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள் - விஜய்
அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.;
சென்னை,
இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்! அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில், தரணி போற்றும் தாய்மார்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.