சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்து இருக்கீங்களா? அரசே நடத்தும் இலவச மாதிரி தேர்வு

முன்பதிவு செய்யும் மாணவர்கள் மட்டுமே இந்த தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.;

Update:2025-12-12 08:44 IST

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாலுகா பதவிகளுக்கு 933 பணிக்காலியிடங்களும், ஆயுதப்படை பதவிகளுக்கு 366 பணிக்காலியிடங்களும் என மொத்தம் 1,299 காலிப்பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து இலவச மாதிரித்தேர்வு வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இந்த அலுவலக டெலிகிராம் சேனலான எம்பிளாய்மெண்ட் ஆபீஸ் நாகர்கோவில் பகிரப்பட்டுள்ள கூகுள் பாமில் பிழையின்றி முன்பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. முன்பதிவு செய்யும் மாணவர்கள் மட்டுமே இந்த தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்