பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-20 14:16 IST

சென்னை,

பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். பாஜகவில் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த சூழலில், 12-வது தேசியத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20-ம் தேதி (இன்று) நடைபெற்றது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்று பெறப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், நிதின் நபினை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நிதின் நபினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளம் வயதில் மிகப்பெரிய பொறுப்புக்குத் தேர்வாகியிருக்கும் நிதின் நபினின் தேசப் பணியும், மக்கள் பணியும் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்