அமித்ஷாவுடன் பேசியது என்ன? சென்னை திரும்பிய ஓ பன்னீர் செல்வம் பேட்டி
முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் திடீர் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.;
சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொண் டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி தனி அணியாக செயல் பட்டு வருகிறார். இவர் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற் ெகாண்டார். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் பா.ஜனதாவு டன் நெருக்கம் ஏற்படுத்தி கொண்டு கடந்த பாராளு மன்ற தேர்தலில் அக்கூட் டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இதன் பிறகு வருகிற சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க.-பா.ஜனதா வுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை பா.ஜனதா மேலிடம் கண்டு கொள்ள வில்லை. எடப்பாடி பழனி சாமியும் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் சேர்க்க முடியாது என்று திட்டவட்ட மாக தெரிவித்து விட்டார்.சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்தும் அவரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.இதனால் விரக்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ.) இருந்து விலகுவதாக அறிவித்தார்.அதன் பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நெருக்கம் ஏற்படுத்தி வந்தார். அவரை அடையாறு பூங்காவில் நடைபயிற்சியின் போது 2 முறை சந்தித்து பேசினார்.
இதனால் தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்து டன் உள்ள மாவட்டச் செயலாளர்கள் பலர் நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் த.வெ.க. கட்சியில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றினார். அதன் பிறகு கடந்த ஒரு வாரமாக கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர் செல்வம் நேற்று திடீர் பயணமாக கொச்சியில் இருந்து டெல்லி சென்றார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமித்ஷாவை சந்தித்ததாக ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளர். அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம், "தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். செங்கோட்டையன் எங்களைவிட்டு போய்விட்டார். செங்கோட்டையனை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை” என்றார்.