சென்னை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை

திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.;

Update:2025-12-12 16:34 IST

சென்னை,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் மகாத்மாகாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர் கடம்பத்தூரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது தாயார் கங்கா பாய் வீட்டை பூட்டிவிட்டு அருகில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

இரவு 10.30 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 3 பவுன் நகைகள் - மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கார்த்திக் கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்