கரூர்: டிப்பர் லாரி கவிழ்ந்து 3 பேர் பலியான சோகம்
வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் மணல் குவியலில் சிக்கி பலியானார்கள்.;
கரூர்,
கரூர் அருகே தென்னிலை பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி திடீரென கவிழ்ந்தது. இதில், லாரியின் மேல் பகுதியில் அமர்ந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் மணல் குவியலில் சிக்கி பலியானார்கள்.
இந்த விபத்தில், லாரி ஓட்டுநரும் இன்னொரு வடமாநில தொழிலாளியும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.