குஷ்புவின் எக்ஸ் பக்கம் ஹேக்

பாஜக நிர்வாகியும், நடிகையுமானவர் குஷ்பு.;

Update:2025-04-19 09:00 IST

சென்னை,

பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவின் எக்ஸ் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து குஷ்பு கூறுகையில்,'இன்று காலை எக்ஸ் பக்கத்தில் நுழையமுயற்சித்தேன். ஆனால், யாரோ புது மெயில் ஐடி பயன்படுத்தி லாகின் செய்ததாக மெசேஜ் வந்தது.

மர்மநபர்கள் புது ஐடி போட்டு என் எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறேன். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் ஹேக்கர்கள் எப்போதும் நமக்கு ஒரு படி முன்னாடிதான் இருக்கிறார்கள்' என்றார்

Tags:    

மேலும் செய்திகள்