மொழிப்போர் தியாகிகளை போற்றுவோம் - டிடிவி தினகரன் பதிவு
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.;
சென்னை,
இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிரீந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”அன்னைத் தமிழைக் காக்கவும், தமிழ் இனத்தின் உரிமையை மீட்கவும் தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திடும் தினம் இன்று.
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இன மொழிகளையும் பாதுகாக்க வித்திட்ட மொழிப்போரில் பங்கேற்று தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.