சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் செல்போனுக்கு தடை
கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது சாமி சிலைகளை வீடியோ எடுத்ததுடன் அதனை ரீல்ஸ்களாக வெளியிட்டனர்.;
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் உள்ளது. கடந்த மாதம் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது சாமி சிலைகளை வீடியோ எடுத்ததுடன் அதனை ரீல்ஸ்களாக வெளியிட்டனர்.
இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் உள்ளே செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையும் மீறி பக்தர்கள் யாரேனும் செல்போன் கொண்டு சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால் போலீசில் வழக்கு தொடரப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.