திமுகவால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது - எடப்பாடி பழனிசாமி

தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட திமுக திறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update:2026-01-25 11:51 IST

கோப்புப்படம்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை, சூளையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுகவால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. திமுகவுக்கு இதுதான் இறுதி தேர்தல். தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட திமுக திறைவேற்றவில்லை.

தமிழகத்தில் எல்லா தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உள்ளது. எங்கு பார்த்தாலும் போராடிக் கொண்டிருக்கும் அளவுக்கு மக்களின் வெறுப்பை திமுக சம்பாதித்துள்ளது. இந்த தேர்தலோடு திமுகவுக்கு மக்கள் விடை கொடுத்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்