நித்தம் நித்தம் நிரூபித்துக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை - வைரமுத்து

கவிஞர் வைரமுத்து மஹிந்திரா நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைவர் வேலுசாமி அவர்களின் அழைப்பின் பேரில் செய்யாறு சென்றிருந்தார்.;

Update:2025-06-28 12:36 IST

சென்னை,

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"மஹிந்திரா நிறுவனத்தின்

தொழில்நுட்பத் தலைவர்

மற்றும் மின்வாகனப் பிரிவின்

நிர்வாக இயக்குநர்

வேலுசாமி அவர்களின்

அழைப்பின் பேரில்

அவர்களின் தலைமையகமான

செய்யாறு சென்றிருந்தேன்

436 ஏக்கர் வளாகத்தை

ஆசை ஆசையாய்ச்

சுற்றிக் காட்டினார்

முன்னேறும் இந்தியாவின்

முன்னணி முகம்கண்டேன்

நிர்வாகிகள் வல்லுனர்கள்

பணியாளர்கள் கூட்டத்தில்

உரையாற்றினேன்

"நித்தம் நித்தம்

நிரூபித்துக்கொண்டே

இருப்பதுதான் வாழ்க்கை

இருத்தலை உழைப்பினால்,

திறமையைச் செயலினால்,

மனைவியை முத்தத்தால்,

பிள்ளையை அன்பால்,

நண்பரை உதவியால்,

தலைவனை விசுவாசத்தால்,

காதலைச் சத்தியத்தால்,

கடன்காரனை நாணயத்தால்,

நாடு மனிதவளத்தால்

நிரூபித்துக் கொண்டே

இருக்க வேண்டும்" என்றேன்

ஒவ்வொரு முகத்திலும்

நாளைய இந்தியாவின்

நம்பிக்கை கண்டேன்

திரு வேலுசாமி

அறிவுத் திறத்தால்

எந்திரங்களுக்குத் தன்னை

நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்