மதுரை: காவலர் கொலை வழக்கில் ஒருவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்

மதுரை ஈச்சனேரியில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸ் சுட்டுப்பிடித்துள்ளனர்.;

Update:2025-03-24 09:00 IST

மதுரை, 

மதுரையில் கடந்த 19 ஆம் தேதி தனிப்படை காவலர் மலையரசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் காவலர் மலையரசன் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவரான மூவேந்திரன் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன் பேரில் மூவேந்திரனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்த, மூவேந்திரனை போலீசார் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காவலர் கொலை வழக்கில் போலீசார் ஒருவரை சுட்டுப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்