பராமரிப்பு பணி: 2 நாட்கள் 21 புறநகர் ரெயில்கள் ரத்து

10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;

Update:2025-05-23 15:24 IST

சென்னை,

பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 24, 26 தேதிகளில் மொத்தமாக 21 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது..

பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே மற்றும் சென்னை கடற்கரை - எண்ணூர் இடையே மொத்தமாக 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்