சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணி: ரெயில் சேவைகள் மாற்றம்

சென்னை - மும்பை, ஐதராபாத் - சென்னை செல்லும் ரெயில்களின் சேவைகளில் தற்காலிகமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.;

Update:2026-01-23 19:07 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 03 பிப்ரவரி 2026 முதல் 05 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும்/முடிவடையும். அதன் விவரங்கள் பின்வருமாறு:

1. சென்னை கடற்கரை – மும்பை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22158), 04 பிப்ரவரி 2026 முதல் 04 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து காலை 06.45 மணிக்கு புறப்படும்.

2. சென்னை கடற்கரை – ஐதராபாத் சார்மினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12759), 04 பிப்ரவரி 2026 முதல் 05 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.

3. ஐதராபாத் – சென்னை கடற்கரை சார்மினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12760) , 03 பிப்ரவரி 2026 முதல் 04 ஏப்ரல் 2026 வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் காலை 7 மணிக்கு வந்து சேரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்