திண்டுக்கல்: வரதமாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள 3077 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.;

Update:2026-01-23 18:02 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து ஆயக்குடி பெரியகுளம், வீரகுளம், பாப்பன்குளம் மற்றும் மாப்பிள்ளைநாயக்கன்குளம் மற்றும் ஆயக்குடி பெரியவாயக்கால், பாப்பன்வாய்க்கால் மற்றும் கோதை அணைக்கட்டு நேரடி வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களிலுள்ள பாசன பயிர்களுக்காக 24.01.2026 முதல் 21.03.2026 வரையிலான காலத்தில், உரிய இடைவெளி விட்டு, 89.51 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ( நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள 3077 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்