மடப்புரம் இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினருக்கு மு.க ஸ்டாலின் ஆறுதல்

உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-01 18:00 IST

அமைச்சர் பெரிய கருப்பண் ஆறுதல் சென்ற போது எடுத்த படம்

சென்னை,

போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்த இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அஜித் குடும்பத்தினரை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் சந்தித்து பேசிய போது முதல் அமைச்சர் தொலைபேசி வாயிலாக பேசி ஆறுதல் கூறினார். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முதல்வர் முக ஸ்டாலின் உறுதியளித்தார். வருத்தமாக இருக்கிறது. மனதை தேற்றிக்கொள்ளுங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியதாக அஜித்குமாரின் தாயார் மாலதி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழகத்தை அதிரவைத்த சம்பவம்:

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 27). இவர் மடப்புரம் பத்திர காளியம்மன் கோவிலில் கடந்த 3 மாதங்களாக காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரின் காரில் இருந்த நகை மாயமானது தொடர் பாக அவரை திருப்புவனம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மதியம் 2 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற அவரிடம் இரவு 9 மணி வரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

மறுநாள் காரை இயக்கிய ஆட்டோ டிரைவர் அருண், அஜித்குமாரின் சகோதரர் நவீன் ஆகியோரும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் நகை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியதை  அடுத்து இருவரும் விடுவிக் கப்பட்டனர். ஆனாலும் போலீசார் தங்களையும் தாக்கியதாக தெரிவித்து இருந்தனர். 28-ந்தேதி அஜித்குமாரை கார் பார்க்கிங் செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார், மாலை 5 மணிக்கு கோவிலுக்கு பின்புறமுள்ள கோசாலை பகுதியில் வைத்து விசாரித்துள்ளனர். அந்த சமயத்தில் அஜித்குமார் மயங்கி விழுந்தார்.

அவரை சிவகங்கை, மதுரை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெம்போ வேன், ஆம்புலன்ஸ் வாகனங்களில் அழைத்து சென்ற போலீசார் அன்று இரவு அஜித்குமார் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். போலீசார் தாக்கியதால்தான் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து 6 போலீஸ் காரர்கள் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்ட னர். இந்த நிலையில் நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளி யானது. அதில் காவலாளி அஜித்குமார் மிக கொடூர மாக தாக்கப்பட்டதற்கு அடையாளமாக அவர் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் காவலாளி அஜித்குமாரை தாக்கிய 5 போலீஸ்காரர்கள் உடனடியாக கைது செய் யப்பட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை விசாரணை நடத்தியது. நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பிய நிலையில்,  இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டுள்ள ஐகோர்ட்டு கிளை, வரும் 8 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்