வீட்டில் குளித்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த நகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம்

வீட்டில் குளித்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த நகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update:2025-06-20 07:21 IST

தென்காசி,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் நிலுவை வரி வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் நகராட்சி வரிவசூல் பணி மேற்பார்வையாளரான ஓவர்சீயர் அனந்தராமகிருஷ்ணன் தலைமையில், ஊழியர்கள் மேலூர் பகுதியில் உள்ள வீடுகளில் நிலுவை வரிவசூல் செய்தனர்.

அப்போது அங்குள்ள வீட்டில் குளித்து கொண்டிருந்த பெண்ணை அனந்தராமகிருஷ்ணன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கிருந்து அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

இதுதொடர்பாக அந்த பெண், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் புனிதனிடம் புகார் மனு வழங்கினார். அதன்பேரில், ஆணையாளர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அதிகாரி அனந்த ராமகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். வீட்டில் குளித்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்