நெல்லை: பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டது...!
கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி காரையார் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.;
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக கரடி சுற்றித்திரிந்தது. இந்த கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்தனர். இந்நிலையில், மணிமுத்தாறு தங்கம்மன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் கரடி இன்று சிக்கியது. இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி காரையார் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.