நெல்லை: அந்தியோதயா ரெயில் மீது கல்வீச்சு - பயணி காயம்

மர்மநபர்கள் திடீரென்று ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசினர்.;

Update:2026-01-03 07:39 IST

நெல்லை,

நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை வழியாக தாம்பரத்துக்கு தினமும் அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ரெயில் நேற்று ஆரல்வாய்மொழி அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் திடீரென்று ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஒரு கல், 5-வது பெட்டி பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி மீது விழுந்தது. அந்த கண்ணாடியில் ஓட்டை விழுந்து கண்ணாடி துகள்கள் சிதறின.

ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி என்ற பயணியின் மீது கண்ணாடி துண்டுகள் விழுந்தன. இதில் அவருக்கு தலை மற்றும் முகம் பகுதியில் காயம் ஏற்பட்டது. ரெயில் நெல்லை வந்ததும் ரீனா அன்னமேரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரல்வாய்மொழி பகுதிக்கு சென்று ரெயில் மீது கற்களை வீசிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்