வேலூரில் இன்று டிரோன்கள் பறக்க தடை

துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் இன்று வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளார்.;

Update:2026-01-03 07:58 IST

வேலூர்,

துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில், இன்று அவர் வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளார்.

அவரது வருகையை முன்னிட்டு, வேலூர் விமான நிலையம், பொற்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வேலூர் பகுதியில் இன்று எந்த காரணத்திற்காகவும் டிரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்