தூத்துக்குடியில் புதிய அங்கன்வாடி மையம்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
தூத்துக்குடி-மீளவிட்டான் பகுதியில் என்.டி.பி.எல். நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி-மீளவிட்டான் பகுதியில் என்.டி.பி.எல். நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் என்.டி.பி.எல். தலைமைச் செயல் அலுவலர் அனந்தராமானுஜம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வி, மாவட்ட திட்ட அலுவலர் காயத்ரி மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், பாக முகவர்கள் கலா, கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.