புதுக்கோட்டை: குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து - மக்கள் அவதி
இந்த தீ விபத்தில் வெளியான கரும் புகை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் இன்று எதிர்பாராதவிதமாக தீ ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் தீ மளமளவென எரியத்தொடங்கியது. இதனால் கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது.
பின்னர் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட கரும் புகை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.