திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.;
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவில் வரும் 6ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மலை மேல் ஏற்றப்படும் மரத்திலான கொடியேற்றத்திற்கான ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்ப்பட்டது.
இதனிடையே, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்துள்ளது.
தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்து தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறை தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.