மின்சாரம் தாக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

ஒருவர் உயிரிழந்த நிலையில் டவரை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-05-16 17:35 IST

கரூர்,

கரூர் மாவட்டம் சேர்ந்தவர் சரஸ்வதி (55). இவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். குளித்தலை பகுதியில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவரது வீட்டின் அருகே டவர் ஒன்று அமைந்திருந்தது. இந்த நிலையில் டவரின் சுற்று வேலியில் இரும்புக் கம்பத்தை தொட்டபோது மின்சாரம் பாய்ந்தது. இதனால் ஆசிரியை சரஸ்வதி (55) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே டவரை அகற்றக் கோரி உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்