கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகளுக்கு செந்தில் பாலாஜியே காரணம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;

Update:2026-01-04 18:26 IST

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' யாத்திரை நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி. பாஜக அனைத்து மத விழாக்களிலும் கலந்துகொள்கிறது. முதல்-அமைச்சர் போலியான மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறார். திமுக கூட்டணி என்பது போலியான கூட்டணி.

கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்புக்கு செந்தில் பாலாஜியே காரணம். உடனடியாக உடற்கூராய்வு செய்யப்பட்டதற்கு செந்தில் பாலாஜிதான் காரணம். செந்தில் பாலாஜியை காப்பாற்றவே கரூருக்கு இரவோடு இரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய போலியான கூட்டணியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அமித்ஷா உருவாக்கியது ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்