தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர். பார்வையாளர் ஆலோசனை
எஸ்.ஐ.ஆர். பார்வையாளர், துணிநூல் துறை இயக்குநர் லலிதா, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் முன்னிலையில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.;
தூத்துக்குடி விமான நிலைய விருந்தினர் அறையில் இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) பார்வையாளரும், துணிநூல் துறை இயக்குநருமான ஆர்.லலிதா, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் முன்னிலையில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.