தாம்பரம்: கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் எ.வ.வேலு

தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்துவதற்கு பரிசீலனை செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரவித்துள்ளார்.;

Update:2025-03-26 13:12 IST

தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையில் 1.4 கி.லோ மீட்டர் வலது பக்கம் வனத்துறை பகுதியாகவும் இடப்பக்கம் குடியிருப்பு பகுதியாகவும் இருக்கிறது. 4 வழிச்சாலையாக மாற்ற வனத்துறை அனுமதி பெறவும், விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும், அதன் அடிப்படையில் பணிகளை பரிசீலனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. 7.2 கிலோமீட்டர் சாலை போக்குவரத்து அடர்த்தியின் அடிப்படையில் நான்கு வழிசாலையாக அகலப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்