பம்பையில் இருந்து தமிழக அரசு பேருந்து இயக்கம் - கிளாம்பாக்கம் வந்து சேர்ந்த முதல் பேருந்து

பம்பையில் இருந்து இயக்கப்பட்ட முதல் தமிழக அரசு சிறப்பு பேருந்து இன்று கிளாம்பாக்கம் வந்து சேர்ந்தது.;

Update:2024-11-17 15:21 IST
பம்பையில் இருந்து தமிழக அரசு பேருந்து இயக்கம் - கிளாம்பாக்கம் வந்து சேர்ந்த முதல் பேருந்து

சென்னை,

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். சபரிமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பான யாத்திரைக்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள், கோவில் நிர்வாகம் மற்றும் கேரள மாநில அரசு சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நவம்பர் 15 முதல் ஜனவரி 16-ந்தேதி வரை சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூரில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள், இருக்கை, படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி இல்லாத சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்ட தமிழக அரசின் சிறப்பு பேருந்து முதல்முறையாக கிளாம்பாக்கம் வந்தடைந்தது. கடந்த நவம்பர் 15-ந்தேதி முதல் கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து பம்பைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் பம்பையில் இருந்து இயக்கப்பட்ட முதல் தமிழக அரசு சிறப்பு பேருந்து இன்று கிளாம்பாக்கம் வந்து சேர்ந்தது. பேருந்தில் பயணித்த பக்தர்கள் நிலக்கல் செல்லாமல், நேரடியாக பம்பையில் இருந்து கிளம்புவது வசதியாக உள்ளதாக தெரிவித்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்