தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-03-06 16:43 IST

சென்னை,

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான சுதாகர் தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சுதாகர் தற்போது மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநராக சுதாகரை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகளோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ சுதாகர் அந்தப் பதவியில் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்