அரக்கோணம் அருகே டேங்கர் லாரி - கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே டேங்கர் லாரி - கார் மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-07-17 14:24 IST

அரக்கோணம்,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே டேங்கர் லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கார் மெக்கானிக் வெங்கடேசன் (55) அவரது மனைவி மற்றும் 19 வயது மகனுடன் கோவிலுக்குச் சென்று வீடு திரும்பும்போது நடந்த இந்த கோர விபத்தில், மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் மற்றும் அவரது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்தில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்