தென்காசி: ராமநதி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

இதனால் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 4,943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.;

Update:2025-11-06 19:10 IST

தென்காசி,

நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், ராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 07.11.2025 முதல் 31.03.2026 வரை 145 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 60 க.அடி வீதம் 823.91 மி.க.அடிக்கு மிகாமல் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில், தென்காசி வட்டம், கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், பொட்டல்புதூர், அயன்பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், பாப்பன்குளம் கிராமங்களில் உள்ள 4,943.51 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்