தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: வெள்ளி மயில் வாகனத்தில் அம்பாள் வீதி உலா

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் வரும் 15ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும்.;

Update:2025-11-10 03:47 IST

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நவம்பர் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.

இதன்படி நேற்று 5ம் நாள் திருவிழாவாக வெள்ளி மயில் வாகனத்தில் அம்மன் ரத வீதி உலா நடைபெற்றது. வருகிற 13ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்மன் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் வரும் 15ம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெறும். திருவிழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்